6.1 அடி மணமகன் 2.8 அடி மணமகள். இங்கிலாந்தில் நடந்த விசித்திர திருமணம்,.
[carousel ids=”73354,73355,73356,73357″]
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 2 அடி 8 இன்ச் உயரமே உள்ள ஒரு பெண், 6 அடி 1 இன்ச் உயரமுள்ள ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த விசித்திர திருமணத்திற்கு உறவினர்களும், நண்பர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த Hinckley என்ற பகுதியை சேர்ந்த Amanda Fyfe என்ற பெண்ணுக்கு பிறவியிலேயே எலும்புகளில் குறைபாடு இருந்ததால், அவர் 2 அடி 8 இன்ச் அளவே வளர்ந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு ஸ்டீபன் என்பவரை சந்தித்து அவரை காதலித்து சுமார் ஆறு வருடங்கள் அவருடன் திருமணம் செய்யாமலேயே வாழ்ந்துள்ளார். இவர்களுக்கு 6 வயதில் எய்டன் என்ற மகன் இருக்கின்றார்.
இந்நிலையில் தற்போது இருவரும் அதிகாரபூர்வமாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இவர்களது திருமணம் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்த திருமணம் குறித்து ஸ்டீபன் கூறியபோது, ‘இரு உள்ளங்கள் ஒன்று சேர உயரம் ஒரு தடையில்லை என்றும், தங்களின் குடும்ப வாழ்க்கை எவ்வித பிரச்சனையும் இன்றி நடப்பதாகவும் கூறினார்.