சிறிய கண்களை அழகாக காட்ட டிப்ஸ்

daecf3b9-7020-4316-b985-d06e338cab33_S_secvpf

சின்னதாக இருக்கும் கண்களை பெரிதாக காட்ட த்ரெட்டிங் செய்யும்போது மேல் பக்க புருவத்தில் முடியை அகற்றாமல் கீழ் பக்கம் உள்ள புருவ முடிகளை மட்டும் எடுக்க வேண்டும். இப்படி செய்வதால் சிறிய கண்களை உடையவர்களுக்கு பார்க்க அழகாக இருக்கும்.

புருவத்தில் அதிக முடி இல்லாதவர்கள் கூட த்ரெட்டிங் செய்யும்போது, அந்த புருவத்திற்கு ஒரு ஷேப் கிடைத்து பார்க்க அழகாக இருக்கும். மேலும், வில் போன்ற ஷேப்பில் புருவம் இருந்தால் கண்கள் பார்க்க தனியாக தெரியும். ஐஷேடோ மற்ற நிறங்களில் போடாமல் பிரவுன் அல்லது ஸ்கின் கலர் உபயோகியுங்கள். ஐலைனரும் பிரவுன் நிறத்தில் மேல்புற இமையில் உபயோகித்தால் கண்கள் எடுப்பாக, அழகாகவும் தெரியும்.

அதே சமயம் சிறிதாகவும் தெரியாது. அடுத்து, சாதாரணமான மஸ்காரா உபயோகிக்காமல் Volume Enhancer அல்லது Lash Fantasy  போன்ற மஸ்காரா உபயோகித்தால் கண் இமைகள் அழகாக தெரிவதுடன் கண்களும் எடுப்பாக தெரியும். Kohl பென்சிலைக் கொண்டு கண்களின் கீழ் அழுத்தமாக மெலிதான ஒரே ஒரு லைன் மட்டும் போடுங்கள்.

இப்படி அழுத்தமான அதே சமயம் மெலிதான லைன் வேண்டுமென்றால் Kohl pencil ஐ ஒரு பேப்பரில் நன்றாக ஒரு முறை கிறுக்கிவிட்டு பிறகு உபயோகப்படுத்தினால் அழகாக வரும். அதிகமான அடர்த்தியில் Kohl பென்சிலைப் போட்டால் கண்கள் பளிச்சென்று தெரியாது. இன்னும் சிறிதாக தெரியும். 

Leave a Reply