இன்றைக்கு பட்டி தொட்டி எங்கும், எல்லொர் கையிலும் தவறாமல் இடம்பிடித்திருப்பது ஆண்டிராய்டு போன்கள்.
இந்த ஆண்டிராய்டு போன்கள் தொட்டால், பறக்கும் இண்டர்நெட், HD கேம்ஸ், தெள்ளத் தெளிவான, போடோஸ், வீடியோஸ், என பட்டையை கிளப்புகின்றன.
என்ன தான் திறன் அதிகமாக இருந்தாலும் இவற்றில் உள்ள ஒரே ஒரு குறை பேட்டரி தான். பெரும்பாலான ஆண்டிராய்டு யூசர்களின் பெரும் கவலை இந்த பேட்டரி சார்ஜ்.
தோற்றம் சிக் கென இருப்பதற்காக நாளுக்கு நாள் மெலிந்து வருகின்றன இந்த ஆண்டிராய்டு போன்கள். இதனால் பேட்டரியும், மெலிந்து விடுகிறது.
தெளிவான தொடுதிரை, கேமிரா, சவுண்ட் என அனைத்தையும் இந்த மெல்லிசான பேட்டரிகள் எவ்வளவு நேரம் தான் கொடுத்துக் கொண்டே இருக்கும்.
காலையில் போடும் சார்ஜ், மாலை முடிவதற்குள்ளாகவே முடிந்துவிடுகிறது என்பது தான் ஆண்டிராய்டு வைத்திருப்பவர்களின் பலரின் பெரும் புலம்பல். இப்படிப் புலம்புபவர்களுக்கான ஒரு சிறிய தீர்வு தான் இந்த பேட்டரி டிப்ஸ்.
1. பேட்டரி கேஸ்கள் மற்றும் பவர் பேங்குகள் (Battery Cases & Power Banks)
பேட்டரி கேஸ்கள் அல்லது பவர் பேங்குகள் என்பவை, உங்கள் மொபைலுக்கு ஒரு நடமாடும் சார்ஜராக செயலாற்றும். நீங்கள் போகும் இடத்திற்கெல்லம் சார்ஜரை எடுத்துச் சென்று சிரமப்படுவதை இதன் மூலம் தவிற்கலாம். சந்தைகளில் திறனிற்கேற்ப இவை 400 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை உள்ளன.
2. ஆப்களை கட்டுப்படுத்துவது
உங்கள் ஆண்டிராய்டு மொபைலில் நிறைய ஆப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்திருப்பீர்கள். இவற்றில் நீங்கள் பயன்படுத்தாத ஆப்கள் அல்லது குறைந்த அளவு பயன்படுத்தும் சில ஆப்கள் உங்களுக்கே தெரியாமல் அதிகபடியான பேட்டரியை உரிந்து உங்கள் ஃபுல் டே சார்ஜை காலி செய்து கொண்டிருக்கும்.
இதை எப்படி கண்டுபிடிப்பது..??
மெனுவில் Settings > Battery இவ்வாறு சென்றால், கீழுள்ளது போலான பேட்டரியை பயன்படுத்தும் அப்ளிகேஷன்களின் லிஸ்ட் வரும்.
இந்த லிஸ்டில் நீங்கள் பயன்படுத்தாத ஆப்கள் அல்லது குறைந்த அளவு பயன்படுத்தும் ஆப்கள் அதிக அளவு பேட்டரியை பயன்படுத்தினால் அதனை Force Stop அல்லது Uninstall செய்திடுங்கள்.
3. புஷ் நோடிபிகேஷன்களை கட்டுப்படுத்துவது
நீங்கள் டுவிட்டர், பேஸ்புக், போன்றவற்றை கணினியில் உபயோகிப்பவர் என்றால், இவற்றின் நோடிபிகேஷன்களை மொபைலில் கட்டுப்படித்திக் கொள்ளலாம். இதனால், இவை Backgroundல் ஓடி, சார்ஜை இறக்குவது தவிற்கப்படும். இதே போல், Gmail அப்ளிகேஷனிலும், Manual refresh என்ற முறையைப் பயன்படுத்தலாம். இதனால் நிச்சயமாக குறிப்பிட்ட அளவு பேட்டரி சேமிக்கப்படும்.
4. Bluetooth, Wifi, 3G
நம்மில் பலர் வீட்டிலும், அலுவலகத்திலும் வைபை வைத்திருப்பதால் எப்போதும் வைபையை ஆஃப் செய்யாமல் இருப்போம். இதனால் நிறைய அளவு பேட்டரி வீனாகும். அடுத்தது 3ஜி. இண்டெர்நெட் உபயோகிக்காத போது 3ஜியை அனைத்து வைத்திருக்கலாம்.
அதே போல் GPS. GPS உங்களுக்குத் தேவை இல்லை என்று உணர்ந்தால் அதையும் அனைத்து வைக்கலாம். மேப் உபயோகிக்கும் போது, ஒரு சில மேப் சம்பந்தமான ஆப்கள் பயன்படுத்தும் போது மட்டுமே GPS பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது. புளூடூத், வைபை, மற்றும் 3ஜியை உபயோகிக்காத போது நிறுத்தி வைப்பது மிகவும் முக்கியம்.
இவ்வாறு செய்தால் அதிக அளவிலான பேட்டரியை சேமிக்கலாம். ஆண்டிராய்டு போன்களில் இவற்றை அடிக்கடி ஆன் செய்து ஆப் செய்யும் வகையில், நோடிபிகேன் பாரிலேயே one touchshortcutகள் கொடுக்கப்பட்டுள்ளன.
5. Background running
ஆப்ஸை குறைப்பது பேட்டரி உங்களுக்கு தேவை என்ற பட்சத்தில், Background running அப்ளிகேஷன்களின் எண்ணிக்கையை குறைப்பதும் உங்களுக்குக் கை கொடுக்கும்.
ஆண்டிராய்டு மெனுவில், Settings > Apps இதனுள் சென்று இடது பக்கமாக ஸ்வைப் செய்தால், running என்ற தலைப்பில் வரிசையாக ஆப்கள் வரும். இவற்றில் உங்களுக்கு தேவையில்லாத ஆப்களை ஸ்டாப் செய்து கொள்ளலாம்.
6. Widgets & live wallpaper
ஆண்டிராய்டின் சிறப்பம்சம் என்றால் அது home screen தான். இதில் நாம் வைத்துக் கொள்ளும் live wallpaperகளும், அனிமேடட் Widgetகளும் தான். எனினும், இவை ஆண்டிராய்டின் பேட்டரியில் அதிகஅளவை பயன்படுத்திக் கொள்கின்றன. எனவே, இவற்றால் உங்களுக்கு பயன் இல்லை என்ற பட்சத்தில் இவற்றை நீங்கள் குறைத்துக் கொள்ளலாம்.
7. Automatic Brightness
பல ஆண்டிராய்டு போன்களில் Automatic Brightness வசதி உள்ளது. இது light sensor மூலம் சுற்றுச் சூழலில் உள்ள வெளிச்சத்தை உணர்ந்து Brightnessஐ அட்ஜஸ் செய்யும். Sensor பொதுவாகவே அதிபடியான சார்ஜை இழுபவை. எனவே இந்த லைட் சென்சாரை பயன்படுத்தாது Automatic Brightness வசதியை அனைத்து விட்டு, நீங்களாகவே Brightnessஐ அட்ஜஸ் செய்து கொண்டால் கொஞ்சம் பேட்டரி சேவ் ஆகும்.
8. App Updates
ஆண்டிராய்டின் ஆப் டெவலப்பர்கள், நாளுக்கு நாள் குறைந்த பேட்டரி உபயோகத்திற்காக தங்கள் ஆப்களை மேம்படுத்தி வருகின்றனர். இவற்றில் பெரும்பாலனவை automatic update ஆக அமையும். ஆனால் சில ஆப்களை நாம் தான் Update செய்ய வேண்டும். பிளே ஸ்டோரில், My Apps ஐ டச் செய்தால், Update செய்ய வேண்டிய ஆப்கள் தனியாக தென்படும். இவற்றை Update செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
9. Signal strength
சிக்னல் கிடைக்காத இடங்களில், அதிகபடியான சிக்னலைப் பெறுவதற்காக, ஸ்மார்ட் போன்கள் அதிக திறனுடன் செயல்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே, நீங்கள், சிக்னல் கிடைக்காத இடத்தில் இருந்தாலோ அல்லது சிக்னல் மிகக் குறைவாக கிடைத்தாலோ, கால்ஸ் அல்லது இண்டெர்நெட் வேண்டாம் என்ற பட்சத்தில் உங்கள் போனை Airplane modeல் போட்டு விடலாம். இது உங்கள் பேட்டரியை நிறையவே சேமிக்கும்.
10. Power Saving Mode
Samsung, Sony, HTC, போன்ற பெரும்பாலான போன்களில் Power Saving Mode என்று ஒன்று உள்ளது. உங்கள் மொபைல் பேட்ரியின் நுனிக்குச் சென்றுவிட்டது என்றால் இதனை பயன்படுத்துங்கள். இது, இண்டெர்நெட், பிரைட்னஸ், வைபை, பேக்குரவுண்ட் ஆப்ஸ் போன்ற பலவற்றை குறைத்து உங்கள் போனை கொஞ்சம் பேட்டரியிலும் நீண்ட நேரம் தாக்குபிடிக்க வைக்கும்.