திருக்குறள் என்றாலே, இந்துத்துவா; இந்துத்துவா என்றால் திருக்குறள்’. பாஜக தலைவரின் சர்ச்சை கருத்து

திருக்குறள் என்றாலே, இந்துத்துவா; இந்துத்துவா என்றால் திருக்குறள்’. பாஜக தலைவரின் சர்ச்சை கருத்து

திருக்குறள் என்பது உலகம் முழுவதிலும் உள்ளவர்களால் பொதுமறை நூல் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நூல். இதனால் தான் இந்த நூல் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நூலில் எந்த இடத்திலும் எந்த ஒரு மதத்தையும் குறிப்பிடாமல் பொதுவான கருத்துக்களை மட்டுமே குறிப்பிட்டிருக்கும்

இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கான மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:

திருக்குறளை எங்கள் வழிகாட்டியாகக் கருதுகிறோம். அதன் வளமையை இந்துத்துவாவின் ஒரு அம்சமாகப் பார்க்கிறோம். ஆம், ‘திருக்குறள் என்றாலே, இந்துத்துவா; இந்துத்துவா என்றால் திருக்குறள்’ என்று கூறினார்.

மேலும் தமிழ், தமிழர் என்று கூறிக்கொண்ட திமுக ஆட்சியில்தான் ஐநூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். திராவிடம் என்று முழங்கிய தி.மு.க சாதித்தது என்ன? குடும்ப ஆட்சி, எங்கும் நிறைந்திருந்த லஞ்ச, ஊழல்கள்தானே. இவையெல்லாம்தான் திராவிடத்தின் சாதனையா? போலி பெருமிதம் பேசி, மக்களைச் சுரண்டுவதில் தி.மு.க-வும் காங்கிரசும், இரட்டைக் குழந்தைகள்” என்று கூறினார்.

Leave a Reply