திருப்பதி கோவில் சாமி கும்பிட வந்த தாய்-மகன் அதிர்ச்சி மரணம்.

tirupatiதிருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற திருவள்ளூரை சேர்ந்த தாய் மற்றும் மகன் இருவரும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக மரணம் அடைந்ததால் கோவில் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூரை சேர்ந்த 35 வயது லட்சுமி தனது கணவர், மற்றும் ஒன்றரை வயது மகன் மகேஷ் ஆகியோருடன் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிவில் சாமி தரிசனம் செய்ய தர்மதரிசன வரிசையில் நின்று கொண்டு இருந்தனர்.

அப்போது மழை பெய்ததால் ஈரமாக இருந்த தரையில் அறுந்து கிடந்த சுவிட்ச் வயரை மிதித்த லட்சுமியும், அவரது மகன் மகேஷையும் மின்சாரம் தாக்கி இருவரையும் தூக்கி வீசியது.

மின்சாரம் தாக்கியதால் மயக்கமடைந்த இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த அஸ்வினி மருத்துவமனைக்கு அவரது கணவர் எடுத்து சென்றார். ஆனால் அங்குள்ள டாக்டர்கள் அளித்த சிகிச்சையின் பலனின்றி இருவரும் சிறிது நேரத்தில் மரணம் அடைந்தனர்.

திருப்பதி கோவில் நிர்வாகத்தின் அலட்சியத்தால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். தரையில் அறுந்து கிடந்த வயரை சரிசெய்யாமல் அலட்சியமாக இருந்த மின்வாரிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுபற்றி திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறியதாவது:-

திருமலையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்துவருகிறது. இதனால் பக்தர்கள் வரிசைக்கு செல்லும் பாதையில் ஒரு மின்சார ஒயர் அறுந்து விழுந்து கிடந்ததால் மின்சாரம் தாக்கி இருவரும் இறந்துள்ளனர். அவர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து மின்சார இணைப்புகளையும் பரிசோதனை செய்ய உத்தரவிட்டு இருக்கிறோம். இனி இதுபோன்ற துயர சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.  

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/12W3ycu” standard=”http://www.youtube.com/v/pJwIO__3Bxs?fs=1″ vars=”ytid=pJwIO__3Bxs&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep1081″ /]

Leave a Reply