பதவியேற்கும் முன்னரே மரணம் அடைந்த அதிமுக எம்.எல்.ஏ
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க., எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்ட சீனிவேல் இன்று காலை 6.20 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 65
கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சீனிவேல் சிகிச்சையின் பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். திருப்பரங்குன்றம் தொகுதியில் கடந்த 2001ஆம் ஆண்டு தேர்தலில் ஏற்கனவே வெற்றி பெற்றிருந்த சீனிவேல் தற்போது மீண்டும் அதிமுக வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றார்.
தேர்தலுக்கு பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை வடமலையான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் பின்னர் உடல் நிலை கவலைக்கிடமானதைத் தொடர்ந்து வேறு ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று காலை அவர் காலமானார்.