தேவஸ்தானம் அறிவிப்பு
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஏழுமலையான் கோவிலில் உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு இருக்கும் நிலையில் வரும் 8ம் தேதி முதல் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி என டிடிடி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஆனால் அதே நேரத்தில் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி இல்லை என்றும், முதல் கட்டமாக உள்ளூர் வாசிகள் மற்றும் தேவஸ்தான ஊழியர்களுக்கு மட்டும் தரிசனம் செய்ய அனுமதி என தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் தரிசனம் செய்பவர்கள் 6 அடி இடைவெளியுடன் வரிசையில் நின்று தரிசனம் செய்ய அரசு அறிவுறுத்தியுள்ளடு. இருப்பினும் விரைவில் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது