ப.சிதம்பரம் மீது ரூ.3 லட்சம் கோடி மோசடி புகார். சிபிஐ விசாரிக்க திருப்பூர் தொழிலதிபர்கள் கோரிக்கை

ப.சிதம்பரம் மீது ரூ.3 லட்சம் கோடி மோசடி புகார். சிபிஐ விசாரிக்க திருப்பூர் தொழிலதிபர்கள் கோரிக்கை

P-Chidambaramமுன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான்வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையினர் சமீபத்தில் ரெய்டு நடத்திய நிலையில் ப.சிதம்பரம் ரூ.3 லட்சம் கோடி மோசடி செய்ததாக திருப்பூர் தொழிலதிபர்கள் திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெரிவேடிவ் என்று கூறப்படும் வெளிநாட்டு ஏற்றுமதி பேர ஒப்பந்தம் மூலம் ப.சிதம்பரம் நிதி மோசடி செய்ததாகவும் இதன்மூலம் அவர் சுமார் ரூ.3 லட்சம் கோடி மோசடி செய்ததாகவும் திருப்பூர் தொழில்துறையில் பகீர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

பனியன் ஏற்றுமதிக்கான தொகையை டாலரின் மதிப்பிற்கேற்ப இந்திய ரூபாயின் மதிப்பில் முறையாக வழங்காமல் ப.ச்சிதம்பரம் ஏமாற்றி விட்டதாக தொழில்துறையில் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English Summary: Tirupur exporters complaint against P.Chidambaram

Leave a Reply