அசாம், மேகாலய கிரிமினல்கள் திருப்பூரில் கைது. பெரும் பரபரப்பு.

megalaya terroristsமேகாலயா மாநிலத்தின் போராளிக் குழுத் தலைவர் உள்பட 2 பேர் திருப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேகாலாய மாநிலத்தின் போராளிக்குழு தலைவர் திருப்பூரில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவல்களை அடுத்து மேகாலயா தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று திருப்பூர் வந்தனர். திருப்பூர் போலீஸாரின் உதவியோடு அவர்கள் திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், சின்னக்கரையில் உள்ள பனியன் நிறுவனத்தில், சோதனையிட்டனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக இருந்த இரண்டு பேர்களை பிடித்து விசாரணை செய்தனர்.  அவர்கள் இருவரும் அசாம் மாநிலத்தில் இருந்து வந்த தொழிலாளர்கள் என்று தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் அசாம் மாநிலத்தில் உள்ள மெண்டித்தஷ் போலீஸ் காவலில் இருந்து தப்பி ஓடிய போராளிக் குழுத் தலைவர் வில்லியம் ஏ.சங்மா(27) அங்கு பணியாற்றி வருவது கண்டறியப்பட்டது. இவர் அசாம் மாநிலம், கோல்பரா மாவட்டம், பக்ரபூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.

அதேபோன்று மேகாலயா மாநிலம், தெற்கு கரோஹில்ஸ் சோக்பாட் பகுதியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள டாகல்கர் கிராமத்தைச் சேர்ந்த அலாஸ் ஆர்.சங்மா(32) என்கிற மற்றொரு போராளிக் குழுவைச் சேர்ந்தவரும் இங்கு பணிபுரிவது கண்டறியப்பட்டது. இதையடுத்து 2 பேரையும் போலீஸார் நேற்று கைது செய்து, திருப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் 1-ல் ஆஜர்படுத்தி மேகலாயா அழைத்துச் சென்றனர்.

Leave a Reply