டியூனா மீன் சாலட்

 

p34b

தேவையானவை: வேகவைத்து தோல் நீக்கப்பட்ட டியூனா வகை மீன் – 400 கிராம், நறுக்கிய செலெரி, வெங்காயம் – தலா 20 கிராம், ஐஸ்பெர்க் லெட்யூஸ் (iceberg lettuce) – 100 கிராம், கேப்பர் (caper) – 10 கிராம்,  நறுக்கிய பார்ஸ்லி இலை – 5 கிராம், கடுகு பேஸ்ட் – 5 கிராம், நறுக்கிய எலுமிச்சை தோல் – 5 கிராம், எலுமிச்சை சாறு – 5 மி.லி,  உப்பு – தேவையான அளவு.

செய்முறை: டியூனா மீனை, தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு, பின் தோல் நீக்கி ப்ளேக்ஸ் போல வெட்டிக்கொள்ளவும். ஒரு சிறிய கப்பில் , செலெரி, லெட்யூஸ், வெங்காயம், கேப்பர், எலுமிச்சை தோல், பார்ஸ்லி இலை இவற்றை நறுக்கி மீனோடு சேர்த்து நன்றாகக் கலக்கவும். கடைசியில் கடுகு பேஸ்ட், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்துக் கிளறி, சாலடாகப் பரிமாறவும்.

 

பலன்கள்: இந்த மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், நார்ச்சத்து,  மாங்கனீஸ், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் நிறைந்திருக்கிறன. ரத்த உறைவு, பக்கவாதம், இதய நோய்கள் வராமல் தடுக்கும். நார்ச்சத்து நிறைவாக உள்ளதால், மலச்சிக்கலைத் தடுக்கிறது.

ஐஸ்பெர்க் லெட்யூஸ், பார்ஸ்லி இலைகள், செலெரி, கேப்பர் ஆகியவை மிகவும் குறைவான கலோரி கொண்டவை என்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் சாப்பிடலாம். இன்சோம்னியா என்ற தூக்கமின்மை நோயால் அவதிப்படுபவர்களுக்கு, இந்த சாலட் நல்லது. ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் இருப்பதால், புற்றுநோய் வராமல் தடுக்கும். பார்ஸ்லி, கேப்பரில் வைட்டமின் கே உள்ளது. எலும்புகள், கால்சியத்தை கிரகிக்க இது உதவுகிறது. இரும்புச்சத்து இருப்பதால், ரத்த சோகை நோய் வராமல் தடுக்கிறது. டியூனா மீனில் சிறிதளவு பாதரசம் இருக்கிறது. எனவே குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டாம்.


 

Leave a Reply