திமுக, அதிமுக கைகழுவியதால் பாஜக கூட்டணியில் தமாக?

திமுக, அதிமுக கைகழுவியதால் பாஜக கூட்டணியில் தமாக?
gk vasan
அதிமுக கூட்டணியில் தங்களுக்கு கண்டிப்பாக இடம் கிடைக்கும் என கடைசி வரை நம்பியிருந்த தமாக, கடைசி வரை அழைப்பு விடுக்காமல் இருந்ததால் தற்போது ஏதாவது ஒரு முடிவை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் ஜி.கே.வாசன் உள்ளார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதால் அந்த கூட்டணியில் சேர தயங்குகிறார் வாசன். அதே நேரத்தில் மக்கள் நலக்கூட்டணியில் ஏற்கனவே ஒரு பெரிய கூட்டம் இருப்பதால் பத்தோடு பதினொன்றாகவும் இணைய அவர் விரும்பவில்லை.

இந்நிலையில் பாஜகவுடன் தமாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. என்னதான் காங்கிரஸில் இருந்து பிரிந்து வந்த கட்சியாக இருந்தாலும் பாஜகவை மதவாத கட்சியாகவே ஜி.கே.வாசன் இதுவரை பார்த்துவந்துள்ளார். எனவே பாஜகவுடன் அவர் கூட்டணி சேருவாரா என்பது சந்தேகமே.

இந்நிலையில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் பேட்டி ஒன்றில் கூறும்போது, ‘”தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 2-ம் கட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமாகாவுக்குள் ஒருமித்த கருத்து ஏற்பட்டவுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். அதிமுகவுடன் தமாகா கூட்டணி வைப்பதை விட பாஜகவுடன் கூட்டணி வைப்பதே சரியானதாக இருக்கும். ஊழலுக்கு எதிரான கட்சிகள் பாஜகவுடன் ஒன்றிணைய வேண்டும். நாங்கள் சிலரை அழைப்பது பலவீனமானவர்கள் என்பதற்காக அல்ல. பலத்தைக் கூட்டுவதற்குதான். வாசனை வரவேற்கிறோம். உதிரியாக இருந்தால் சாதிக்க முடியாது. உறுதியாக இருந்தால் சாதிக்கலாம்.”என்று கூறியுள்ளார்.

எனவே விரைவில் பாஜக-தமாக கூட்டணி வரும் என்றும் வராது என்றும் இருவேறு கருத்துக்கள் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றது.

Leave a Reply