மக்கள் நலக்கூட்டணியில் தமாக. தொகுதி உடன்பாடுகளின் விபரங்கள்
திமுக, அதிமுகவுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து தமாக தலைவர் வாசன் மக்கள் நலக்கூட்டணியில் நேற்று இணைந்தார். இந்நிலையில் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்த உடன்பாடு நேற்று முடிவானது.
இதன் மூலம் ஒவ்வொரு கட்சிகளும் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை பின்வருமாறு:
தேமுதிக 104
மதிமுக 29
தமாக 26
வி. சிறுத்தைகள் 25
இந்திய கம்யூ 25
மார்க்.கம்யூ 25
மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக, தமாக இணைந்துள்ளதால் வலுவடைந்ததாக கூறப்படினும், இந்த கூட்டணிக்கு மக்கள் ஆதரவு எப்படி உள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
இந்நிலையில் இன்று மக்கள் நலக்கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம் மாமண்டூரில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தற்போது புதியதாக இணைந்துள்ள ஜி.கே.வாசனும் கலந்து கொள்கிறார்.