அமைச்சர் பதவியில் இருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கம்.

krishnamurthyகடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிமுக கட்சியின் பதவியில் இருந்து நீக்கப்பட்ட தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தற்போடு அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பரிந்துரையை ஏற்று கவர்னர் ரோசைய்யா இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்துள்ளார்.

வேளாண்மைத்துறையில், 4 ஓட்டுநர்கள் நியமனத்திற்கு ரூ.12 லட்சம் லஞ்சம் கேட்டு அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொல்லை கொடுத்ததன் காரணமாக, நெல்லை மாவட்ட வேளாண்துறை செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்டதாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது கூறப்பட்ட புகார் காரணமாக இந்த பதவி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால் மட்டும் போதாது. அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்பட  எதிர்க் கட்சி தலைவர்கள் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் பொறுப்பை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் கூடுதலாக கவனிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply