மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சுதந்திர இந்தியாவில் இதுவரை எந்த ஒரு தமிழக முதல்வரும் மேட்டூர் அணையில் இருந்து நீரை திறந்துவிடாத நிலையில் சற்றுமுன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டார்.

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக முதல்கட்டமாக 2,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்ட்டுள்ளதாகவும், இன்று மாலைக்குள் 20,000 கன அடிக்கு உயர்த்தப்படும் என்றும் தெரியவந்துள்ளது.

மேட்டூர் அணையில் தண்ணிரை திறந்துவைத்தவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியபோது, ‘மேட்டூர் அணைப்பகுதியில் நினைவு ஸ்தூபியை கட்டவும், பூங்காவை மேம்படுத்தவும் ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், கடைமடை வரை நீர் செல்லும் அளவுக்கு மேட்டூரிலிருந்து நீர் திறக்கப்படும் என்றும் மேட்டூர் அணையில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் காவிரி விவகாரத்தில் சட்டப்போராட்டம் நடத்தி தமிழக மக்களுக்காக இறுதி மூச்சுவரை உழைத்தவர் ஜெயலலிதா என்றும் காவிரி பிரச்னையில் சட்டப்போராட்டம் நடத்தி அதிமுக அரசு வென்று காட்டியுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

Leave a Reply