ஜெயலலிதா சமாதிக்கு திடீர் விசிட் அடித்த முதல்வர் பழனிச்சாமி

ஜெயலலிதா சமாதிக்கு திடீர் விசிட் அடித்த முதல்வர் பழனிச்சாமி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதிக்கு அவ்வப்போது அரசியல் தலைவர்கள் சென்று பரபரப்பை ஏற்படுத்தி வருவது வழக்கமாக உள்ளது. ஓபிஎஸ், தீபா உள்பட பல தலைவர்கள் கடந்த சில மாதங்களில் ஜெயலலிதா சமாதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்

நேற்று தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களை முடித்துக்கொண்டு, அவர் நேராக ஜெயலலிதா சமாதிக்குச் சென்றார். அவருடன் தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோரும் சமாதியில் மரியாதை செலுத்தினார்கள்.

Leave a Reply