தமிழக முதல்வருக்கு கிடைத்த தாத்தா பதவி
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கலுக்கு பேரக் குழந்தை பிறந்துள்ளது.
அதிமுக அம்மா அணியின் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவி வகித்து வரும் நிலையில் அவருடைய மகன் மிதுன்-திவ்யா தம்பதிகளுக்கு நேற்று முன் தினம் நள்ளிரவில் அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்/
பொறியியல் படிப்பை நிறைவு செய்துள்ள முதல்வர் மகன் மிது, கடந்த ஆண்டு பெருந்துறையைச் சேர்ந்த திவ்யா என்பவரை திருமணம் செய்தார். இந்நிலையில் திவ்யா கர்ப்பிணியாக இருந்ததால், அவருடைய பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தார். இதற்கிடையில் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நேற்று முன் தினம் நள்ளிரவு திவ்யாவிற்கு வலி ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதனால் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தாத்தா ஆனார்.