அடுத்த நிமிடம் வெளிவந்த முதல்வரின் வேண்டுகோள்
கொரோனா தடுப்பு நிதியாக மத்திய அரசுக்கு ரூ.50 லட்சமும், மாநில அரசுக்கு ரூ.50 லட்சமும் கொடுத்த தல அஜித், பெப்சி தொழிலாளர்களுக்காக ரூ.25 லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.
அஜித் நிதியுதவி செய்தார் என்று செய்தி வெளியான அடுத்த சில நிமிடங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இதன்படி கொரோனா நிவாரண நிதியை பொதுமக்கள் தாராளமாக வழங்க வேண்டும் என்றும், சிறு துளி பெரு வெள்ளம் எனும் முதுமொழிக்கு ஏற்ப அனைவரும் குறைந்த தொகையை வழங்கினாலே ஏழை எளிய மக்களை காப்பாற்ற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.