வி.ஐ.பிக்களை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் யார்?

வி.ஐ.பிக்களை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் யார்?
veeralakshmi
தமிழகத்தின் விஐபி தொகுதிகளாக ஜெயலலிதா நிற்கும் ஆர்.கே.நகர் தொகுதி மற்றும் கருணாநிதி, ஸ்டாலின், விஜயகாந்த், அன்புமணி உள்ளிட்டோர் நிற்கும் தொகுதிகளாக உள்ளது. கடந்த காலங்களில் பெரிய தலைவர்கள் நிற்கும் தொகுதிகளில் எதிர்க்கட்சிகள் டம்மியாகத்தான் வேட்பாளர்களை நிறுத்துவார்கள். ஆனால் இம்முறை ஒரு இயக்கத்தின் தலைவரை தோற்கடிக்க இன்னொரு இயக்கத்தினர் தீவிரமாக இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகரில் வீரலட்சுமி நிற்க வைக்க மக்கள் நலக்கூட்டணி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் மதிமுகவின் பம்பரம் சின்னத்தில் போட்டியிடுவார் என்று வைகோ தெரிவித்துள்ளார். மேலும் சமூக சேவகர் டிராபிக் ராமசாமியும் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் மு.க.ஸ்டாலின் நிற்பார் என எதிர்பார்க்கப்படும் கொளத்தூரில் பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக வேட்பாளராக நிற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் விஜயகாந்த் நிற்கும் தொகுதி எதுவாக இருந்தாலும் அவரை தோற்கடிக்க வேண்டும் என்று அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாகவும் இதனால் விஜயகாந்த் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து வலுவான வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்றும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

அதேபோல் அன்புமணி, வைகோ, தமிழிசை செளந்திரராஜன், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் நிற்கும் தொகுதிகளிலும் வலுவான வேட்பாளர்களை பிற கட்சிகள் நிற்கவைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply