தமிழக சட்டமன்ற தேர்தல். 73.76 சதவீத ஓட்டுப்பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தல். 73.76 சதவீத ஓட்டுப்பதிவு
election
தமிழகத்தில் நேற்று 232 தொகுதிகளிலும் காலை முதல் விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடைபெற்றது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வாக்களர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றினர்.

இந்நிலையில் தமிழகத்தில் மொத்தம் நேற்று 73.76 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவித்துள்ளார். அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் 88.5 சதவீதமும், குறைந்த பட்சமான சென்னை துறைமுகம் தொகுதியில் 55.27 சதவீதமும் பதிவகியுள்ளது.

தமிழகத்தில் ஒருசில இடங்களில் சிறுசிறு மோதல்கள் ஏற்பட்டாலும் பொதுவாக இந்த தேர்தல் அமைதியாக நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் சீல் வைக்கப்பட்டு தகுந்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி வரும் 19ஆம் தே தொடங்கப்பட்டு அன்று காலை 10.30 மணி முதல் முன்னணி நிலவரம் தெரியவரும் என தேர்தல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply