7வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம். கண்டுகொள்ளாத தமிழக எம்பிக்கள்
வறட்சி நிவாரணம் , கடன் ரத்து உள்ளிட்ட கோரிக்கை உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழக விவசாயிகள் 7வது நாளாக டெல்லியில்ல் ஈடுப்பட்டு வருகின்றனர். ஆனால் விவசாயிகளின் போராட்டத்தை இதுவரை மத்திய அரசு கொண்டுகொள்ளாமல் உள்ளது.
மத்திய அரசுதான் கண்டுகொள்ளவில்லை என்றால் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 39 எம்பிக்களும் கண்டுகொள்ளவில்லை என்று விவசாயிகள் ஆதங்கம் கொண்டுள்ளனர்
அரசியல் பிரச்சனைக்காக டெல்லி சென்று பிரதமர், குடியரசு தலைவர்களை சந்திக்கும் 39 தமிழக எம்பிக்கள் விவசாயிகளின் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டனதுக்குரியது என்று சமூக வலைத்தளங்களில் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விவசாயம்தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு என்ற நிலையில் விவசாயிகளை பிரச்சனைகளில் இனியாவது உடனடியாக தலையிட்டு அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.