தேர்வு நடத்தாமல் எட்டாம் வகுப்பில் வரை தேர்ச்சி: தமிழக அரசு ஆலோசனை

தேர்வு நடத்தாமல் எட்டாம் வகுப்பில் வரை தேர்ச்சி: தமிழக அரசு ஆலோசனை

கொரோனா வைரஸ் பரவி வருவதை முன்னிட்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் மார்ச் 31-ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகள் மற்றும் கல்வி மையங்கள் அனைத்தும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மட்டும் தகுந்த பாதுகாப்புடன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அடுத்த கட்டமாக ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தேர்வு நடத்தாமல் அனைவருக்கும் தேர்ச்சி என்ற முடிவை எடுக்க தமிழக அரசும் கல்வித்துறையும் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

ஏற்கனவே உத்தரப்பிரதேச மாநிலம் உள்பட ஒருசில மாநிலங்களில் தேர்வு நடத்தாமல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்ச்சி என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply