ஜல்லிகட்டு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கேவியட் மனு

ஜல்லிகட்டு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கேவியட் மனு

ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

ஜல்லிக்கட்டு குறித்து தமிழக அரசு நேற்று அவசரச் சட்டம் பிறப்பித்தது. மேலும், ஜல்லிக்கட்டுக்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளதால், அலங்காநல்லூர் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளதோடு அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க அவர் மதுரை சென்றுள்ளார்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. ஜல்லிக்கட்டு குறித்து யார் வழக்கு தொடர்ந்தாலும் அதில் தமிழக அரசின் கருத்தை கேட்க வேண்டும் என்று அந்த கேவியட் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் கருத்தை கேட்காமல் ஜல்லிக்கட்டு தொடர்பாக எந்தவித உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்றும் அந்த கேவியம் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply