மாலையில் வழங்கப்பட்ட அனுமதி இரவில் ரத்து:

 தமிழகத்தில் பெரும் பரபரப்பு

தமிழகத்தில் மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டிருக்கும் நிலையில் அத்தியாவசிய தேவை உள்ள கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று மாலை திடீரென இரும்பு, சிமெண்ட், சுத்திகரிப்பு. சர்க்கரை, காகிதம், ரசாயனம், ஜவுளித்துறை, உரம், உருக்கு, கண்ணாடி, ஃபவுண்டரி உட்பட 12 துறைகளை சேர்ந்த தொழிற்சாலைகள் இயங்க தமிழக அரசுஅனுமதி அளித்துள்ளது.

இதனை அடுத்து அந்த குறிப்பிட்ட தொழிற்சாலைகளில் பணி புரிபவர்கள் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால் இந்த நிம்மதி ஒரு சில மணி நேரங்களில் தகர்ந்து போனது. மாலையில் 12 தொழிற்சாலைகளை தொடங்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் திடீரென இரவில் அந்த அந்த அனுமதியை ரத்து செய்யப்பட்டதாக தமிழக அரசிடமிருந்து அறிவிப்பு வெளிவந்தது இதனால் மீண்டும் மக்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர் இதனால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply