சென்னைக்கு தண்ணீர் கொடுக்க நெய்வேலி மக்கள் எதிர்ப்பு: பிறகு எப்படி கர்நாடகம் கொடுக்கும்?
ஒரே மாநிலத்தில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு தண்ணீர் கொடுக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்னொரு மாநிலம் தண்ணீர் கொடுக்கவில்லை என்று புலம்புவது ஏன் என்று சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக ஒரு ஹேஷ்டேக் ஓடிக்கொண்டிருக்கின்றது
சென்னையில் தற்போது குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. சென்னையில் நீர் ஆதாரனமான சோழவரம், பூண்டி ஏரிகள் வறண்ட நிலையில் கோடை தொடங்குவதற்கு முன்பே சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் வெயில் சுட்டெரிப்பதால் நிலத்தடி நீரும் அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது.
சரி பக்கத்து மாநிலத்தில் உள்ள வீராணம் மூலம் தண்ணீர் வரவழைக்கலாம் என்றால் அங்கும் வறண்ட நிலை காணப்படுகிறது. இந்நிலையில் வேறு வழியில்லாததால் நெய்வேலி சுரங்கத்தில் இருந்து தண்ணீர் எடுக்க தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால் இதற்கு நெய்வேலி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்,
நெய்வேலி விவசாய சங்கங்கள் இதுகுறித்து கூறுகையில், ‘தண்ணீர் இல்லாமல் விவசாயமே நலிந்து வரும் நிலையில் இங்கிருந்து தண்ணீர் எடுத்து சென்னைக்கு கொடுக்க முடியாது என்று கூறியுள்ளனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு சென்னை மக்கள் போராட வேண்டும், ஆனால் சென்னைக்கு ஒரு பிரச்சனை என்றால் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பதா? இப்படி ஒரு மாநிலத்திற்குள்ளேயே ஒற்றுமை இல்லை என்றால் பக்கத்து மாநிலமான கர்நாடகம் எப்படி தண்ணீர் கொடுக்கும்? என்று சமூகவலைத்தளங்களில் பலர் கருத்து கூறி வருகின்றனர்.