பேரறிவாளன் விடுதலை வழக்கில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல்
பேரறிவாளன் உள்பட 7 பேர்களை விடுதலை செய்ய வலியுறுத்தும் சீராய்வு மனு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில் அவர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு உரிமை உண்டு என்றும், மத்திய அரசிடம் ஆலோசனை கேட்கலாமே தவிர அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் இந்த சீராய்வு மனுவுவுக்கு பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் திருமாவளவன், வேல்முருகன் போன்ற அரசியல் கட்சி தலைவர்களும் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஆனால் அதே நேரத்தில் தமிழக அரசின் சீராய்வு மனுவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.