ஓபிஎஸ் மீது விசாரணை: தமிழக அரசின் உத்தரவால் பரபரப்பு
ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசு இதுகுறித்த விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. அப்போது பதிலளித்த தமிழக அரசின் வழக்கறிஞர் ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் ஓபிஎஸ் மீது சொத்துக்குவிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.