முகக் கவசத்தை பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும்: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்ற ஒரு பக்கம் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து கோடிக்கணக்கில் செலவு செய்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் இலாப நோக்கத்தை கருதி ஒரு சில மருந்தகங்கள் முகக் கவசம் மட்டும் சானிடைசர்களை அதிக விலைக்கு விற்று வருகின்றனர்
ஒருசில மருந்தகங்கள் இவற்றை பதுக்கி வைத்துக்கொண்டு இரண்டு மடங்கு, மூன்று மடங்கு விலையில் விற்பனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது போன்று தமிழகத்தில் மருந்து கடைகள் அதிக விலைக்கு முகக்கவசங்கள், சானிடைசர்களை விற்பனை செய்து வருவதாக புகார்கள் அதிகம் வெளி வந்ததன் காரணமாக தமிழக அரசு தற்போது அதிரடி எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
இதன்படி முகக் கவசம் மற்றும் சானிடைசர்களை பதுக்கி, அதிக விலைக்கு விற்றால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. உலகமே கொரோனா வைரஸினால் திண்டாடி இருக்கும் நிலையில் பணத்திற்காக இப்படி ஒரு கேவலமான செயலை செய்ய வேண்டாம் என சமூக ஆர்வலர்கள்களும் மருந்து கடைக்காரர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்