தமிழகத்தில் 27 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி மாற்றம்

தமிழகத்தில் 27 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி மாற்றம்

TN1தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். பொதுப்பணித் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும், சில துறைகளின் பொறுப்புகள் கூடுதலாக சில அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டுள்ளன .

இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் நேற்று பிறப்பித்தார்.

1. எஸ்.கே.பிரபாகர்- பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் (வணிக வரிகள் துறை ஆணையாளர்)

2. என்.எஸ்.பழனியப்பன்-எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் (பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், எரிசக்தித் துறை செயலாளர்–கூடுதல் பொறுப்பு)

3. ஜக் மோகன் சிங் ராஜு-எரிசக்தி மேம்பாட்டு முகமையின் தலைவர்-நிர்வாக இயக்குநர் (சிறு-குறு-நடுத்தரத் தொழில்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், சிட்கோ தலைவர்-நிர்வாக இயக்குநர் கூடுதல் பொறுப்பு)

4. மங்கத் ராம் சர்மா-சிறு-குறு-நடுத்தரத் தொழில்கள் துறை முதன்மைச் செயலாளர், சிட்கோ தலைவர்-நிர்வாக இயக்குநர் கூடுதல் பொறுப்பு (தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் தலைவர்-நிர்வாக இயக்குநர்)

5. சி.சந்திரமௌலி-வணிக வரிகள் துறை ஆணையாளர், வணிக வரிகள்-பதிவுத் துறை முதன்மைச் செயலாளர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் (பணியாளர்-நிர்வாகச் சீர்திருத்தத் துறை-பயிற்சிப் பிரிவு கூடுதல் தலைமைச் செயலாளர்)

6. ஆர்.வெங்கடேசன்-தமிழ் வளர்ச்சி-செய்தித் துறை செயலாளர், வருவாய்த் துறை செயலாளர் பொறுப்பை கூடுதலாகக் கவனிப்பார்.

7. ஏ.கார்த்திக்-பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை செயலாளர், உயர்கல்வித் துறை செயலாளர் பொறுப்பை கூடுதலாகக் கவனிப்பார். (சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலாளர், நகர்-ஊரமைப்புத் துறை ஆணையாளர்-கூடுதல் பொறுப்பு)

8. தர்மேந்திர பிரதாப் யாதவ்-வீட்டுவசதித் துறை செயலாளர் பொறுப்புடன், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலாளர், நகர்-ஊரமைப்புத் துறை ஆணையாளர் பொறுப்புகளை கூடுதலாக கவனிப்பார்.

9. அபூர்வா-தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் நிர்வாக இயக்குநர் (உயர்கல்வித் துறை செயலாளர்)

10. டி.உதயசந்திரன்-தமிழ்நாடு உப்புக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் (தமிழ் வளர்ச்சி-செய்தித் துறை செயலாளர், நிதித் துறை செயலாளர்-செலவினங்கள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை செயலாளர், குன்னூர் இன்ட்கோசர்வ் தலைவர்-நிர்வாக இயக்குநர்)

11. உப்பு கழகத்தின் இயக்குநர் பொறுப்பை சி.காமராஜ் கூடுதலாக கவனித்து வந்தார். சிமென்ட் கழகத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பைத் தொடர்ந்து கவனிப்பார்.

13. அம்பூஜ் சர்மா-குன்னூர் இன்ட்கோசர்வ் தலைவர்-நிர்வாக இயக்குநர் (தொழில்கள்-வர்த்தகத் துறை இயக்குநர்)

14. பி.உமாநாத்-நிதித் துறை கூடுதல் செயலாளர், நிதித் துறை செயலாளர்-செலவினம் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்.

15. டி.கே.ராமசந்திரன்-தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர், தமிழ் இணைய கல்வி கழக இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்.

16. பி.ஜோதி நிர்மலாசாமி- தொழிலாளர்-வேலைவாய்ப்புத் துறை கூடுதல் செயலாளர் (தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர்)

17. டி.எஸ்.ராஜசேகர்-தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் (புதுக்கோட்டை மாவட்ட உதவி ஆட்சியர்)

18. பி.அமுதா-தொழிலாளர்-வேலைவாய்ப்புத் துறை செயலாளர், உணவு பாதுகாப்புத் துறை ஆணையாளர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் (தொழிலாளர் நலத் துறை ஆணையாளர்)

19.எல்.சுப்பிரமணியன்- தொழிலாளர் நலத் துறை ஆணையாளர் (வருவாய் நிர்வாக இணை ஆணையாளர்)

20. பி.டபிள்யூ.சி.டேவிதார்-தமிழ்நாடு நகர்ப்புற நிதி-உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் தலைவர்-நிர்வாக இயக்குநர் (பணியாளர்-நிர்வாகச் சீர்த்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர், அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் தலைவர-நிர்வாக இயக்குநர்-கூடுதல் பொறுப்பு)

21. எஸ்.சுவர்ணா-பணியாளர்-நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர், பயிற்சிப் பிரிவு செயலாளர் பொறுப்பையும், அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார். (தமிழ்நாடு நகர்ப்புற நிதி-உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் தலைவர்-நிர்வாக இயக்குநர்)

22. பி.சிவசங்கரன்-நகர்ப்புற நில உச்சவரம்பு-நகர்ப்புற நல வரித் துறை ஆணையாளர் (சமூகநலன்-சத்துணவுத் திட்டத் துறை முதன்மைச் செயலாளர்)

23.கே.மணிவாசன்-சமூக நலன்-சத்துணவுத் திட்டத் துறை செயலாளர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் (மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மாநில ஆணையாளர்)

24. முகமது நசிமுதீன்-மாற்றுத் திறனாளிகள் நலத் துறை ஆணையாளர் பொறுப்பை கூடுதலாகக் கவனிப்பார்.

25. ஆர்.பழனிசாமி-கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் (தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய நிர்வாக இயக்குநர்)

26. ஷம்பு கல்லோலிகர்-தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய நிர்வாக இயக்குநர் (தோட்டக் கலைத் துறை ஆணையாளர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்)

27.சிவதாஸ் மீனா-முதல்வரின் முதன்மைச் செயலாளர்-2-ஆக உள்ளார். அவர் பொது-மறுவாழ்வுத் துறையின் முதன்மைச் செயலாளர் பொறுப்பையும் கூடுதலாக வகிப்பார். இந்தப் பொறுப்பு உள்துறை செயலாளரான அபூர்வ வர்மாவிடம் கூடுதலாக இருந்தது.

Leave a Reply