தமிழக முடி நடும் மையங்களுக்கு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நோட்டீஸ்

தமிழக முடி நடும் மையங்களுக்கு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நோட்டீஸ்

hairமுடி மாற்றும் மையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் குறித்த விவரங்களை, ஒரு வாரத்திற்குள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் சென்னை மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர் சந்தோஷ்குமார் முடி நடும் மையத்தில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டபோது அதிகப்படியான மயக்க மருந்து செலுத்தியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையின் அறிக்கை வெளிவந்த பின்னர் முடி நடும் மையத்தின் மீது நடவடிக்கை எடுக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.  

இந்நிலையில் சந்தோஷ் குமாருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம், விளக்கம் கேட்டு, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், நோட்டீஸ் அனுப்பியது. அதுமட்டுமின்றி இதுபோன்று தமிழகத்தில் உள்ள அனைத்து ஹேர் டிரான்ஸ்பிளான்ட் மையங்களுக்கு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி இந்த சிகிச்சை குறித்து விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

‘ஹேர் டிரான்ஸ்பிளான்ட்’ சிகிச்சை அளிப்பது யார், மருத்துவர்களின் கல்வித்தகுதி மற்றும் டெக்னீஷியன்களின் முழு விவரங்கள் ஆகியவற்றை முடி நடும் மையங்கள் ஒரு வாரத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply