அமித்ஷாவை சந்திக்க அவசர அவசரமாக சென்ற தமிழக அமைச்சர்கள்: பெரும் பரபரப்பு
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை அவ்வப்போது தமிழக அமைச்சர்கள் சந்தித்து வரும் நிலையில் இன்று திடீரென அமைச்சர்கள் தங்கமணி மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க டெல்லி செல்வதாக செய்திகள் வெளியாகியுள்ளது
ஏற்கனவே சென்னையில் திட்டமிட்ட நிகழ்ச்சிகளை அவர்கள் இருவரும் ரத்து செய்துவிட்டு திடீரென டெல்லிக்கு செல்வதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது ’அரசுமுறை பயணங்களில் சிலவற்றை வெளியே சொல்ல முடியாது’ என்று தெரிவித்து விட்டு அவசர அவசரமாக சென்று விட்டார்
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அமைச்சர் ஜெயக்குமார் அவசர அவசரமாக சந்திக்கச் செல்வது ஏன் என்பது குறித்து பெரும் புதிராகவே உள்ளது