ஆட்டம் காணும் அதிமுக-திமுக கூட்டணி: என்ன ஆகும் 2021 தேர்தல்?
ஒருபக்கம் ’திமுக கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்கவில்லை என கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்ட திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்டம் கண்டுள்ளது. மீண்டும் கே.எஸ்.அழகிரி சமாதானமாக திமுகவுடன் பேச முன்வந்த போதிலும் திமுக தரப்பில் இருந்து கூட்டணியை முறித்துக் கொள்ளும் வகையில் அறிக்கைகள் வெளிவந்து கொண்டிருப்பதால் இந்த கூட்டணி ஆட்டம் கண்டு இருப்பதாக கூறப்படுகிறது
அதேபோல் இன்னொரு பக்கம் அதிமுக மீது சரமாரியாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்ட அவருக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்த, அதிமுக-பாஜக கூட்டணியும் தள்ளாடிக் கொண்டிருக்கிறது
இந்த நிலையில் வரும் 2021ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியும், திமுக-காங்கிரஸ் கூட்டணியும் உடையும் வாய்ப்பு இருப்பதாகவும் அந்த தேர்தலில் மூன்றாவது ஒரு அணி அடைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது