மனிதன்’ தமிழ்ச்சொல் இல்லையாம். தமிழக அரசை கிண்டல் செய்யும் உதயநிதி
உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘மனிதன்’ திரைப்படம் நேற்று வெளியாகி ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்று வரும் நிலையில் இந்த படம் ‘யூ’ சான்றிதழ் பெற்றிருந்தபோதிலும், தமிழக அரசு இந்த படத்திற்கு வரிவிலக்கு அளிக்க மறுத்துவிட்டது. ‘மனிதன்’ என்ற சொல் தமிழ்ச்சொல் இல்லை என்றும், மாந்தர், மாந்தன் என்பதே சரியான தமிழ்ச்சொல் என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதற்கு டுவிட்டரில் உதயநிதிக்கு ஆதரவாகவும், அரசின் முடிவுக்கு எதிராகவும் பல டுவீட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. உதயநிதியும் தனது பங்கிற்கு ‘மனிதன்’ தமிழ்ச்சொல் இல்லையாம்’ என்று கிண்டலாக பதிவு செய்துள்ளார். மேலும் அரசின் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வரும் திங்கள் அன்று வழக்குப்பதிவு செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே இதே காரணத்திற்காகத்தான் உதயநிதியின் ‘கெத்து’ திரைப்படத்திற்கு வரிவிலக்கு மறுக்கப்பட்டு இதுகுறித்த வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.