காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரிணிக்கு சபாநாயகர் கண்டிப்பு. சட்டசபையில் சலசலப்பு.

9சட்டசபையில் உட்கார்ந்து கொண்டு பேசியதாககாங்கிரஸ் பெண் எம்,எல்.ஏ.க்கு, சபாநாயகர் தனபால் கண்டனம் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் தொழில்துறை மானியக் கோரிக்கையின்போது திருப்பூர் எம்,எல்.ஏ. கே.தங்கவேல் நோக்கியா நிறுவனத்துக்கு சலுவை அளித்ததால் வரி இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டை தொழில்துறை அமைச்சர் பி,தங்கமணி மறுத்து பேசினார். மேலும் நோக்கியா நிறுவனத்துக்கு ஒரு ரூபாய்க்குக்கூட சலுகை காட்டவில்லை என்றும் கடந்த மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தால் சில சிக்கல்கள் ஏற்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால் இதில் ஒழுங்குப்பிரச்சினை எழுப்ப அனுமதிக்கும்படி காங்கிரஸ் எம்.,எல்.ஏ. எஸ்.விஜயதரணி கை உயர்த்தி, சபாநாயகரிடம் அனுமதி கேட்டார். சபாநாயகர் விஜயதரணிக்கு அனுமதி அளிக்காததால்
தொடர்ந்து தன் இருக்கையில் அமர்ந்துகொண்டே விஜயதரணி, தனக்கு சபாநாயகர் அனுமதி மறுத்தது பற்றி சத்தமாக பேசிக்கொண்டிருந்தார்.

இதையடுத்து. விஜயதரணியை சபாநாயகர் தனபால் கடுமையாகக் கண்டித்தார். உட்கார்ந்து கொண்டு பேசுவதை விட்டுவிடுங்கள். அவை விதிகளுக்கு கட்டுப்பட்டு நடந்துகொள்ளுங்கள் என்று கண்டித்தார்.

Leave a Reply