எதிர்பார்த்ததை விட இருமடங்கு முதலீடுகள் கிடைத்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்

எதிர்பார்த்ததை விட இருமடங்கு முதலீடுகள் கிடைத்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்
cm cm1
சென்னையில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் உலகின் பல நாடுகளிலும் இருந்து மிக ஆர்வமாக கலந்து கொண்ட தொழிலதிபர்கள் தமிழகத்தில் ரூ.2.42 லட்சம் கோடி அளவில் முதலீடு செய்ய உறுதியளித்துள்ளனர். இந்த தகவலை தமிழக முதல்வர் ஜெயலலிதா மிக பெருமையுடன் கூறியுள்ளார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா நிறைவுரை ஆற்றினார். அதில், “‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இனிமேல் தமிழகத்தில் 2 ஆண்டுக்கு ஒருமுறை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும். அதன்படி, வரும் 2017ஆம் ஆண்டு தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும்.

இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்திற்கு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடுகள் வரவுள்ளன. இதுவரை 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடுகள் வரவுள்ளது. இதில் 50 சதவீதத்திற்கும் அதிகமான முதலீடுகள் தென் மாவட்டங்களில் வர உள்ளது.

இந்த மாநாட்டில், எரிசக்தி துறையில் 1 லட்சத்து 7 ஆயிரம் கோடிக்கும், தகவல் தொழில்நுட்பத் துறையில் ரூ.10,950 கோடிக்கும், விவசாயத் துறையில் ரூ.800 கோடிக்கும், மீன்வளத்துறையில் ரூ.500 கோடிக்கும் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது. அதேபோல், கைத்தறி மற்றும் ஜவுளித் துறையில் ரூ.1,955 கோடிக்கும், உற்பத்தித் துறையில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடிக்கும், மின்சக்தி துறையில் ரூ.1லட்சத்து 7 ஆயிரம் கோடிக்கும் ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் தமிழகம் எதிர்பார்த்த இலக்கை விட இரு மடங்கு முதலீடுகள் தமிழகத்திற்கு கிடைக்க உள்ளன.

அதேபோல், உலகின் மிகப்பெரிய கார் உற்பத்தி மையமாக விரைவில் சென்னை மாறும். தற்போது சென்னையில் 3 நிமிடத்திற்கு ஒரு கார் தயாராகி வருகிறது. அதேபோல், முதலீட்டாளர்களின் சொர்க்க பூமியாக தமிழகம் மாறும்.

ஆசியாவின் மிகப்பெரிய 3 முதலீட்டு மையங்களில் ஒன்றாக தமிழகம் மாறும்” என்றார்.

Leave a Reply