வேட்டி விவகாரத்தில் ஜெயலலிதா எச்சரிக்கைக்கு பணிந்தது கிரிக்கெட் கிளப்.

srinivasan and jayaவேட்டிக்கு அனுமதி அளிக்காத கிளப்புகளின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என நேற்று ஜெயல்லிதா விடுத்த எச்சரிக்கைக்கு அடிபணிந்தது மெட்ராஸ் கிரிக்கெட் கிளப். இன்று இதுகுறித்து ஐ.சி.சி. தலைவர் ஸ்ரீநிவாசன் அளித்த பேட்டி ஒன்றில், “வேட்டி விவகாரத்தில் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று நடப்போம் என கூறியுள்ளார்.

கடந்த வெள்ளியன்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பில் நூல் வெளியீட்டு விழாவிற்கு வேட்டி அணிந்து சென்ற உயர் நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமனுக்கும் ஒருசில வழக்கறிஞர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழகத்தின் அரசியல் கட்சிகள் கடும் கண்டங்கள் எழுப்பின. இந்த விவகாரம் சட்டமன்றத்திலும் எதிரொலித்தது.

இந்நிலையில், வேட்டிக்கு தடை விதிக்கும் கிளப்புகளின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழக முதல்வரின் அறிக்கை வெளியான சிலமணி நேரங்களில் அறிக்கைவிடுத்த ஐ.சி.சி.தலைவர் ஸ்ரீநிவாசன்  தமிழக முதல்வரின் பரிந்துரையை ஏற்று செயல்படுவோம் என செய்தியாளர்களை அழைத்து தெரிவித்தார்.

இதனால் இனிமேல் வேட்டி அணிந்து செல்பவர்களுக்கு கிளப் எந்தவித எதிர்ப்பும் இருக்காது என உறுதியாகியுள்ளது. இது தமிழர்களின் பாரம்பரிய உடைக்கு கிடைத்த வெற்றி என அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

Leave a Reply