TNPL கிரிக்கெட்: மதுரை அணிக்கு மீண்டும் தோல்வி. காரைக்குடி அணியிடம் வீழ்ந்தது
TNPL கிரிக்கெட் போட்டி தொடரில் ஏற்கனவே 3 தோல்விகளை கண்டுள்ள மதுரை சூப்பர் ஜெயண்ட் அணி, நேற்று காரைக்குடி அணியுடன் மோதி 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற நேற்றை ஆட்டத்தில் டாஸ் வென்ற காரைக்குடி அணி, முதலில் பேட்டிங் செய்து 149 ரன்கள் குவித்தது. ராஜ்குமார் 46 ரன்களும், பத்ரிநாத் 24 ரன்களும் எடுத்தனர்.
150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை அணி 16.1 ஓவர்களில் 97 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. காரைக்குடி அணியின் ராஜ்குமார் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.