TNPL கிரிக்கெட்: அரையிறுதிக்கு தகுதி பெற்ற அணிகள் எவை எவை?
ஐபிஎல் போட்டிக்கு இணையாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நடைபெற்று வந்த TNPL கிரிக்கெட் தொடரின் போட்டிகள் தற்போது கிளைமாக்ஸ் கட்டத்திற்கு வந்துள்ளது. நேற்றுடன் லீக் போட்டிகள் முடிவடைந்து நாளை முதல் அரையிறுதி போட்டிகள் தொடங்கவுள்ளன. இந்த அரையிறுதி போட்டிக்கு திண்டுக்கல், ஆல்பர்ட் டூட்டி, சேப்பாக் சூப்பர் கில்லிஸ் மற்றும் லைகா கோவை ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள் செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் விளையாடும்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் காரைக்குடி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் காஞ்சி அணியை தோற்கடித்தது.
ஸ்கோர் விபரம்:
ரூபி காஞ்சி வாரியர்ஸ் அணி: 120/8 20 ஓவர்கள்
கெளசிக் 25
அகில் ஸ்ரீநாத் 17
காரைக்குடி காளை அணி: 122/7 18.5 ஓவர்கள்
ஸ்ரீனிவாசன் 61
ஷாஜஹான் 32
ஆட்டநாயகன்: ஸ்ரீனிவாசன் (காரைக்குடி காளை)
லீக் போட்டிகள் முடிவடைந்ததை அடுத்து அரையிறுதி போட்டிக்கு