டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்துவது குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திர மேனன் அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறிய முக்கிய விபரங்களை தற்போது பார்ப்போம்
அடுத்த ஆண்டு நடத்தப்பட உள்ள டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் அட்டவணையை வெளியிட்டு வருகிறார் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன்
விடைத்தாள் வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும்
குரூப் 2 மற்றும் 2ஏ நிலைகளில் 5831 காலி பணியிடங்கள் உள்ளன
குரூப் 4 – தமிழ்மொழி தேர்வில் 40 மதிப்பெண்கள் கட்டாயம் பெற வேண்டும்
குரூப் 2, 2 ஏ தேர்வுகள் பிப்ரவரி மாதத்திலும், குரூப் 4 தேர்வு மார்ச் மாதத்திலும் அறிவிக்கப்படும்
ஜூலை, செப்டம்பரில் நடத்த இருந்த தேர்வுகள் கொரோனாவால் ஒத்திவைப்பு
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் இனி முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை
தேர்வருக்கு சம்பந்தம் இன்றி தேர்வு மையம் இருந்தால் விளக்கம் கேட்கப்படும்