இன்று மாலைக்குள்.. TNPSC முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகம் முழுவதும் குரூப் 2 குரூப் 2a தேர்வு மூலமாக சுமார் 5529 காலிபணியிடங்களுக்கு 13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

தேர்வுக்கான தற்காலிக விடை குறிப்பை TNPSC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் இதற்கான உத்தேச விடைகளை மேல்முறையீடு செய்வதற்கான காலக்கெடு இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.

உத்தேச விடைகளுக்கான மறுப்புகள் கருத்துகள் ஆகிவற்றை இன்று மாலைக்குள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிவிக்கலாம்.