அதிக நேரம் உட்கார்ந்திருப்பதால் உடலுக்குப் பாதகமான விளைவுகள் ஏற்படுமா?
நாள் முழுவதும் அதிக நேரம் உட்கார்ந்திருப்பவர்கள், மற்றவர்களைவிட இரண்டு மடங்கு வீதம் நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக வியாதிகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அகால மரணமும் இவர்களுக்கு அதிகம் நேர்கிறது. தினசரி உடற்பயிற்சி செய்பவர்கள்கூட அதிக நேரம் உட்காருவதில் செலவழிக்கக் கூடாது. ஏனெனில், மனித உடல் உட்கார்வதற்காக வடிவமைக்கப்பட்டதல்ல.
எனது நுரையீரல் நலமாக இருப்பதை எளிமையாகக் கண்டறிவது எப்படி?
பலூன் ஊதிப் பார்க்கலாம். இது நுரையீரல் திசுக்களையும், சவ்வுத் திரையையும் பலப்படுத்தி எம்விசிமா அறிகுறிகளைக் குறைக்கும். 12 அங்குலப் பலூன்கள் 30-ஐ நிறுத்தாமல் ஊத முடிந்தால், உங்கள் நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கிறது. 20 பலூன்களை மட்டும் உங்களால் ஊத முடிந்தால் உங்களுக்குச் சில சுவாசப் பயிற்சிகள் தேவைப்படும். பத்து பலூன்களை மட்டுமே ஊதமுடிந்தால் உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது நல்லது.
மனிதர்களின் சிறுகுடலுக்குள் உணவு சென்று செரிக்க எத்தனை மணி நேரம் ஆகிறது?
வாயிலிருந்து மலத்துவாரம் வரை உணவின் பயண நேரம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஒவ்வொருவருக்கும் மாறுபடும். மேயோ கிளினிக் ஆய்வுகளின்படி சராசரி 53 மணி நேரம். குழந்தைகளுக்குச் சராசரி 33 மணி நேரம்.
மனிதனது சிறுநீர்ப்பை எவ்வளவு சிறுநீரைத் தாங்கக் கூடியது?
ஆரோக்கியமான ஒரு மனித உடல் இரண்டு கேலன் சிறுநீரைத் தாங்கும். யானையின் சிறுநீர்ப் பையோ 42 கேலன் அளவு சிறுநீரைத் தாங்கும். ஒரு கேலன் என்பது 3.7 லிட்டர்.
வயதாகும்போது எந்த வீதத்தில் நமது தசையின் வலு குறைகிறது?
70 வயதை அடைவதற்குள் தசையின் வலுவும் நிறமும் 25 சதவீதம் குறைந்துவிடும். 90 வயதுகளில் ஐம்பது சதவீதம் குறையும். முறையான உடற்பயிற்சியால் இதைத் தவிர்க்கவும் குறைக்கவும் முடியும்.