இளமையிலேயே முதுமை தோற்றத்தை தடுக்கும் சரும பராமரிப்பு

0730c69b-1a13-4fbb-832e-e5a8b6e5b059_S_secvpf

இளமையிலேயே முதுமைத் தோற்றம் அடைவதை தவிர்க்க, வாரந்தோறும் சருமத்திற்கு ஒருசில பராமரிப்புக்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அதிலும் வாரந்தோறும் மட்டுமின்றி தினமும் மேற்கொள்வது இன்னும் நல்லது.

• சருமம் மிகச்சிறந்த பலனைப் பெறுவதற்கு 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை, 1/2 டீஸ்பூன் மில்க் க்ரீம் மற்றும் 1 டீஸ்பூன் முட்டையின் வெள்ளைக்கருவோடு கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த செயலை வாரம் ஒருமுறை செய்து வரலாம். முக்கியமாக எலுமிச்சையை சருமத்திற்கு பயன்படுத்திய பின் ஏதேனும் எண்ணெயை சருமத்தில் தடவிக் கொள்ள வேண்டும். ஆலிவ் ஆயில், கடுகு எண்ணெய் தேய்த்து கொள்வது மிகவும் நல்லது. இந்த எண்ணெய் இல்லாதவர்கள் தேங்காய் எண்ணெயை தடவி கொள்ளலாம்

• தேங்காய் பாலை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனை வாரம் ஒருமுறை அல்லது ஒரு நாள் விட்டு ஒருநாளும் செய்யலாம்.

• கனிந்த பப்பாளியை மசித்து, அதனை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். பப்பாளி சருமத்திற்கும், கண்களுக்கும் நல்லது. இதற்கு அதில் உள்ள வைட்டமின் ஏ மட்டுமின்றி, அதில் இருக்கும் பாப்கைன் என்னும் நொதி சருமத்தின் மேல் உள்ள இறந்த செல்களை நீக்கி, சருமத்தை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வெளிக்காட்டுகிறது.

• 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டருடன், 3 துளிகள் கிளிசரின் மற்றும் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன், காட்டன் கொண்டு முகத்தில் தடவிக் கொள்ள வேண்டும். இதனாலும் இளமையைப் பாதுகாக்கலாம். ரோஸ் வாட்டர் சருமத்துளைகளில் தங்கியுள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றுவதோடு, சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கும்.

Leave a Reply