ஜப்பானிய கல்வி உதவித்தொகை பெற ஜுன் 17 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

stu_campus

ஜப்பானிய கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ஜுன் 17 ஆம் தேதிக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஜப்பான் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஜப்பானில் உள்ள கல்வி, கலாசாரம், விளையாட்டு, அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகம் சர்வதேச மாணவர்கள் ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயில்வதற்கு கல்வி உதவித்தொகை வழங்கிபடுகிறது. 

சிறப்பு பயிற்சி கல்லூரி (3-ஆண்டுகள்):

முதல் ஆண்டில் ஜப்பான் மொழி பயிலவும், மீதமுள்ள 2 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் தொடர்புடைய சான்றிதழ் கல்வி வழங்கப்படும்.  இதில், தொழில்நுட்பம், சுய கவனிப்பு, உணவூட்டவியல், கல்வி-நலத்துறை, வர்த்தகம், ஆடை வடிவமைத்தல், குடும்ப பொருளாதாரம், கலாசாரம் – பொதுக்கல்வி உள்ளிட்ட துறைகளில் கல்வி பயிலலாம்.

தொழில்நுட்ப கல்லூரிகள் (4 -ஆண்டுகள்):

முதலாம் ஆண்டில் ஜப்பானிய மொழியும், மீதமுள்ள ஆண்டுகளில் செயல்முறை விளக்கத்துடன் கூடிய தொழில் சார்ந்த பொறியியல் கல்வி வழங்கப்படும்.         மெக்கானிக்கல், மின்-மின்னணு இன்ஜினியரிங், தகவல் தொலைத்தொடர்பு- நெட்வர்க் இன்ஜினியரிங், மூலப் பொருள் பொறியியல், கட்டடக்கலை-சிவில் இன்ஜினியரிங், கடல்சார்ந்த பொறியியல் உள்ளிட்ட துறைகளில் கல்வி அளிக்கப்படும்.

பல்கலைக்கழகம் (இளநிலை): 5 ஆண்டுகளில் முதலாம் ஆண்டு ஜப்பானிய மொழியும், சமூக அறிவியல்- மானுடவியல்: சட்டம், அரசியல், ஆசிரியரியல், சமூகவியல், இலக்கியம், வரலாறு, ஜப்பான் மொழி உள்பட இதர துறைகள், பொருளாதாரம், வியாபார நிர்வாகம் உள்ளிட்ட பிரிவுகளில் கல்வி அளிக்கப்படும்.

இயற்கை அறிவியல்: அறிவியல் (கணிதம், இயற்பியல், வேதியியல்), மின்-மின்னணு, மெக்கானிக்கல், சிவில் இன்ஜினியரி- கட்டடக்கலை, வேதியியல் சம்பந்தமான படிப்புகள், வேளாண்மை, சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்க உள்ளது.

தகுதி: விண்ணப்பதாரர்கள் 1994 ஆண் ஆண்டு ஏப்ரல் 2 க்கு பிறகும், 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முன் பிறந்திருத்தல் வேண்டும். பிளஸ் 2, உயர்நிலைப்படிப்பு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் 3 ஆண்டு – 5 ஆண்டுகல் படிப்புகளுக்கு தகுதியுடைவர்களாவர். அதேபோல் 4 ஆண்டு படிப்புக்கு பிளஸ் 1 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு: சென்னையில் உள்ள ஜப்பான் தூதரக வளாகத்தில் நடைபெறவிருக்கும் எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். தேர்வு நடைபெறும் நாள், நேரம் உள்ளிட்டவை பின்னர் தெரிவிக்கப்படும். மேலும், இந்த தேர்வு எழுத ஜப்பானிய மொழி தெரிந்திருக்க வேண்டி கட்டாயம் இல்லை.

தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியல் மெக்ஸ்ட் (ஜப்பானிய கல்வி அமைச்சகம்) க்கு அனுப்பப்படும்.பின்னர், பிப்ரவரி 2016 க்குள் தெரிவிக்கப்படும்.

விதிமுறைகளுடன் கூடிய விண்ணப்பப் படிவங்கள் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள ஜப்பானிய துணைத் தூதரக வளாகத்தில் பெற்றுக்கொள்ளலாம். இது குறித்து விவரங்களுக்கு 044-24323860 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மாணவர்கள் உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை ஜூன் 17க்குள் அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply