செல்ஃபி எடுக்கனுமா?

loopcam--350x250

தற்போது உள்ள தலைமுறையினரிடம் செல்ஃபி(selfie) என்ற பழக்கம் பரவலாக காணப்படுகிறது.

முன்பு தன்னை தானே புகைப்படம் எடுக்கும் பழக்கம் காணப்பட்டது. ஆனால் அதன் பெயர் ‘செல்ஃபி’ என்று கூறப்பட்டபோது, அது வைரலாக பரவியது. இதற்கு பலரும் அடிமைகளாக உள்ளனர்.

மொபைல் போன்களில் பின் பக்க கமெராவில் புகைப்படம் எடுப்பதை விட, முன் பக்க கமெராவில் எடுக்கப்படும் தங்கள் உருவம் சற்று அழகாக இருப்பதாக அவர்கள் நினைக்கின்றனர்.

இதை பயன்படுத்திக் கொண்ட அப்ளிக்கேஷன் (App) வடிமைப்பாளர்கள் அழகுக்கு அழகு சேர்க்க கூடிய பல செல்ஃபி ஆப்களை உருவாக்கியுள்ளனர். அவற்றில் சிலவற்றை பற்றி பார்க்கலாம்.

1) Glitché

இதனை Vladimir Schreyder உருவாக்கியுள்ளார். பலவித அம்சங்களுடன் இது அசத்தலாக வேலை செய்யும். இதனை iPhone-ல் மட்டுமே பயன்படுத்த முடியும்.

2) Frontback

இதன் மூலம் நம்மையும், நாம் பார்ப்பதையும் படம் எடுக்க முடியும். 3,00,000-க்கும் அதிகமான பதிவிறங்களுடன் ஹிட் அடித்துக் கொண்டிருக்கிறது. இருவழிகளை படம் பிடிப்பதால் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

3) MomentCam

சீனாவின் படைப்பான இது Google Play-ல் கிடைக்கிறது. உங்களுடைய படங்களை கார்ட்டூன்களாக கொடுத்து உங்களை வியக்க வைக்கும். ஆப்களின் வரிசையில் உச்சத்திலும் இருக்கிறது.

4) EyeEm

இது சமீபத்தில் தான் வெளிவந்துள்ளது. ஆனாலும் அதற்குள் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. துல்லியமான படங்களை எடுக்க உங்களுக்கு உதவும். இதனை ஆண்டிராய்டு போனில் பயன்படுத்த முடியும்.

5) Candy Camera

இந்த அப்ளிக்கேஷனுக்கு Google Play Storeல் அதிக மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் செல்ஃபி எடுப்பவர்களுக்கு இது நல்ல ஒரு அனுபவத்தை கொடுக்கும். beautification, blemish removal, make-up போன்ற பல அம்சங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

Retrica, Selfie Studio, CamMe, Picr, Frontback, Perfect 365, oSnap, Lumia Selfie, Dubble, Krop Circle, Loopcam, VSCO cam இவையும் ஹிட் அடித்த செல்ஃபி அப்பிளிக்கேஷன் ஆகும்.

Leave a Reply