காற்றுக்கு வேண்டும் வேலி!

veli_2340207f

நவீன ஸ்மார்ட் போன்களில், பின்னணியில் தேவையில்லாத சத்தங்கள் நீக்கப்பட்டுப் பேச்சொலியின் துல்லியம் அதிகரிக்க வழி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் திறந்தவெளியிலோ, வெளிப்புறத்திலோ பேசும்போது பலமாக வீசும் காற்றின் இறைச்சலை என்ன செய்வது? இந்தக் கேள்விக்கு விடை அளிக்கும் வகையில் விண்ட்பிளாக்கர் சாதனம் அறிமுகமாகி இருக்கிறது. ஸ்மார்ட் போன், டேப்லெட்களுக்கான இந்தச் சாதனத்தை மைக்ரோபோன் அருகே பொருத்திவிட வேண்டும்.

அதன் பிறகு இது காற்றின் இறைச்சலைக் கட்டுப்படுத்திப் பேச்சொலியின் இடையூறை நீக்குகிறது. இதைப் பொருத்துவதும், நீக்குவதும் மிகவும் எளிது.

ஸ்மார்ட் போனுக்கான துணை பாகம் போன்ற இதன் வடிவமைப்பும் அழகு. இந்தச் சாதனம் இருந்தால் பலமாகக் காற்றடிக்கும் இடத்திலும் கவலையில்லாமல் பேசலாம் என்கிறது விண்ட்பிளாக்கர் நிறுவனம்.

மேலும் விவரங்களுக்கு : http://www.windblocker.com/#

Leave a Reply