திடீரென குறைந்த கொரோனா
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் 50க்கும் மேல் இருந்து வருகிறது. நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 98 பேர்கள் இருந்த நிலையில் இன்று 31 பேர்களுக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ரஜேஷ் தெரிவித்துள்ளார்
இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் மொத்த எண்ணிக்கை 1204ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 28,711 பேர் இருப்பதாகவும், அரசு கண்காணிப்பில் 135 பேர் இருப்பதாகவும், 28 நாட்கள் தனிமைப்படுத்துதலை முடித்தவர்கள் 88,529 பேர்கள் என்றும் இதுவரை பரிசோதனை செய்தவர்களின் எண்ணிக்கை 19,255 என்றும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இன்று 31 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் தமிழக மக்களுக்கு ஒரு நல்ல செய்தி ஆகும்