தமிழகத்தில் இன்று மீண்டும் 49 பேருக்கு கொரோனா

குறையாத கொரோனாவால் பொதுமக்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1323 ஆக இருந்த நிலையில் இன்று மட்டும் மேலும் 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1372ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மேலும் இன்று மட்டும் 82 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 365 பேர் ஆகும்.

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பதும் தமிழகத்தில் இதுவரை 35 ஆயிரம் பேர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply