மதுரையில் இன்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா.

jaya1 முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் தீவிர முயற்சி எடுத்து இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்று தந்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மதுரை தேனி ,வட்டார விவசாயிகள் சார்பாகவும், அதிமுக சார்பாகவும் இன்று மதுரையில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. இந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா தனி விமானம் மூலம் இன்று மதியம் 2.30 மணிக்கு மதுரை செல்கிறார்.

jaya2

இந்த பாராடு விழாவில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். விழாவுக்காக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக தொண்டர்கள் பெருமளவு கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது. இந்த விழாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக சுமார் 5 ஆயிரம் போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை நகர் முழுவதும் முதல்வருக்கு பெரிய கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் மதுரை நகரமே விழாக்கோலம் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply