அதிர்ச்சி தகவல்
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 14 காசுகளும், டீசல் விலை 52 காசுகளும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் உயர்ந்து 83.18 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
சென்னையில் இன்று டீசல் விலை லிட்டருக்கு 52 காசுகள் உயர்ந்து 77.29 ரூபாயாக உள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று வீழ்ச்சி அடைந்த நிலையில் சென்னை உள்பட இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது