இன்றைய ராசிபலன்கள் 01.02.2018

இன்றைய ராசிபலன்கள் 01.02.2018

மேஷம்
கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
ராசி பலன்கள்

ரிஷபம்
தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
ராசி பலன்கள்

மிதுனம்
இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
ராசி பலன்கள்

கடகம்
மாலை 4.38 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். கணுக்கால் வலிக்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் பற்றுவரவு சுமார்தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
ராசி பலன்கள்

சிம்மம்
குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். மாலை 4.38 மணி முதல் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
ராசி பலன்கள்

கன்னி
குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
ராசி பலன்கள்

துலாம்
உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். அலுவலகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் உங்கள் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
ராசி பலன்கள்

விருச்சிகம்
உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
ராசி பலன்கள்

தனுசு
மாலை 4.38 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. யோகா, தியானம் என மனம் செல்லும். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
ராசி பலன்கள்

மகரம்
கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதம் வந்துப் போகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மாலை 4.38 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
ராசி பலன்கள்

கும்பம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
ராசி பலன்கள்

மீனம்
வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், நட்பால் ஆதாயமும் உண்டு. உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
ராசி பலன்கள்

Leave a Reply