இன்றைய ராசிபலன்கள் 01.02.2022

மேஷம்:
இன்று பணவரத்து கூடும். உடல் சோர்வு உண்டாகலாம். வீண் கவலை, வீண் வாக்குவாதங்கள் ஆகியவை ஏற்படும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

ரிஷபம்:
இன்று தொழில், வியாபாரம், லாபகரமாக நடக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக பலன் தரும். பயணம் மூலம் வியாபாரம், தொழில் விரிவாக்கம் பெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். நிதி நிலைமை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல் திறமை மூலம் கடின பணிகளையும் எளிதாக செய்து முடிப்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மிதுனம்:
இன்று கஷ்டமில்லாத சுக வாழ்க்கை உண்டாகும். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்தினர்கள் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருக்கும். சுதந்திரமான எண்ணம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கடகம்:
இன்று நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எதிர்ப்புகள் அகலும். பணவரத்து கூடும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து கூடும். கடன் பிரச்சனை தீரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

சிம்மம்:
இன்று எண்ணிய காரியங்களை திறமையாக செய்து முடிப்பீர்கள். பணவரவும் இருக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பயணம் செல்ல வேண்டி இருக்கும். சில முக்கியமான முயற்சிகள் அதிக உழைப்பின் பேரில் செய்ய வேண்டி இருக்கும். சொத்துக்கள் மீது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

கன்னி:
இன்று தொழில், வியாபாரம் செய்பவர்கள் தங்களது திறமையை வெளிபடுத்தி வியாபாரம் செய்ய வேண்டி இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஆர்டர் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூல் தாமதமாக இருந்தாலும் பணம் வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

துலாம்:
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். வேலை தொடர்பாக வெளியூரில் தங்க நேரிடலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் தாமதப்படும். வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். அக்கம், பக்கத்தினரிடம் கவனமாக பேசுவதும் வாக்கு வாதத்தை தவிர்ப்பதும் நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

விருச்சிகம்:
இன்று சில முக்கியமான காரியங்களை கூடுதலாக கவனம் செலுத்துவதன் மூலமும் அதிக உழைப்பினாலும் செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். தைரியமாக எதையும் செய்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

தனுசு:
இன்று உங்களது செயல்களால் உங்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபடுவீர்கள். தந்தை மூலம் உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் இருக்கும். சகோதரர்களுக்குள் ஒற்றுமை குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

மகரம்:
இன்று எதை பற்றியும் கவலைப்படாமல் தொழில், வியாபாரத்தில் முழு கவனத்தையும் செலுத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். அரசாங்கம் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களும் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கலின்றி எதையும் செய்து முடிப்பார்கள். பணி தொடர்பான பயணங்கள் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கும்பம்:
இன்று கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் மூலம் ஆதாயம் உண்டாகும். குடும்பத்துடன் புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வீர்கள். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். உங்களது பொருட்களின் மீது கவனம் தேவை. சாதுரியமான செயல்களால் லாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மீனம்:
இன்று எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபட்டு சிறப்பாக செய்வீர்கள். பெரியவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பண தட்டுப்பாடு நீங்கும். குழப்பங்கள் தீரும். எந்த ஒரு காரியத்திலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். ஒதுங்கி இருந்தால் கூட வலுக்கட்டாயமாக எதிலாவது ஈடுபட சுற்றமும், நட்பும் தூண்டுவார்கள். கவனமாக அதை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9